என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » வறுமை குறியீடு
நீங்கள் தேடியது "வறுமை குறியீடு"
ஏழ்மையான மக்கள் தவிர ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களிலும் பீகார் முதலிடத்தில் உள்ளது.
புதுடெல்லி:
நாட்டில் கல்வி, சுகாதாரம், அன்றாட வாழ்க்கை நிலை, பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில் நிலவும் வறுமை தொடர்பாக நிதி ஆயோக் ஆய்வு செய்து தனது முதல் அறிக்கையை (பல பரிமாண வறுமை குறியீடு) வெளியிட்டுள்ளது.
அதில், நாட்டில் மிகவும் ஏழ்மையான மாநிலங்கள் பட்டியலில் பீகார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் ஆகிய மாநிலங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பீகார் மாநிலத்தில் 51.91 சதவீத மக்கள் ஏழைகளாக உள்ளனர். ஜார்க்கண்டில் 42.16 சதவீத மக்களும், உத்தர பிரதேசத்தில் 37.79 சதவீதம் மக்களும் வறுமையில் உள்ளனர். இந்த மாநிலங்களைத் தொடந்து மத்திய பிரதேசம் 36.65 சதவீதம், மேகாலயா (32.67 சதவீதம்) ஆகிய மாநிலங்கள் முறையே 4 மற்றும் 5வது இடத்தில் உள்ளன. தமிழகத்தில் 4.89 சதவீத மக்கள் வறுமையில் உள்ளனர் என கூறப்பட்டுள்ளது.
இதேபோல் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகம் உள்ள மாநிலங்களிலும் பீகார் முதலிடத்தில் உள்ளது. ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்கள் அடுத்த இடங்களில் உள்ளன.
தாய்மார்களின் ஆரோக்கியம், பள்ளிப்படிப்பு, பள்ளி வருகை, சமையல் எரிபொருள் மற்றும் மின்சார பயன்பாடு ஆகியவற்றிலும் பீகார் மிக மோசமான இடத்தில் உள்ளது.
இதையும் படியுங்கள்... ஊழலை முழுமையாக ஒழிக்க வேண்டும்- பிரதமர் மோடி
×

X